॥ ஸ்ரீ கிருஷ்ணாய நம: ॥
மொட்டமலை, உச்சையா நகர், திருநகர், மதுரை – 625 006
கோவில் எப்படி உருவானது
1998 ஆம் ஆண்டு திருநகரில் வசிக்கும் யாதவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். திருநகரில் கிருஷ்ணன் கோவில் என்று தனியாக இல்லாததால், பொது மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என முடிவு செய்தனர்.
அதன்படி "திருநகர் யாதவ பக்த சேவா சங்கம்" என்ற அமைப்பை 04.07.1999 அன்று உருவாக்கினர். இந்த அமைப்பு 20.09.1999 அன்று தமிழ்நாடு முத்திரை சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.
03.10.1999 அன்று கோவில் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2001 ஆம் ஆண்டு கோவில் கட்டப்பட்டது. மூலவர் சிலை நாகர்கோவில் அருகே மைலாடி கிராமத்தில் 2002 ஆம் ஆண்டு செய்யப்பட்டு, அதே ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்று சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவில் இருக்கும் இடம்
மதுரையை அடுத்து திருப்பரங்குன்றம் தாண்டி திருமங்கலம் செல்லும் சாலையில், திருப்பரங்குன்றத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ள இடம்தான் திருநகர். மதுரையிலிருந்து 10 கி.மீ தூரம்.
திருநகர் முதலில் டவுன் பஞ்சாயத்தாக இருந்து, தற்சமயம் மதுரை மாநகராட்சியில் இணைந்துள்ளது. திருநகர் 5வது பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி மேற்கு திசையில் மொட்டமலை என்றொரு மேட்டுப் பகுதி உள்ளது. பக்கத்தில் இருக்கும் குடியிருப்பு குறிஞ்சிநகராகும். அங்குதான் அருள்மிகு கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.
நாளும் நடைபெறும்
தினமும் கோவிலைத் திறந்து சாமி அலங்காரம் மற்றும் பூஜை செய்தல்.
ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாடுதல்.
புரட்டாசி மற்றும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் பூஜை, அர்ச்சனை; பக்தர்கள் புனஸ்காரம் செய்ய கோவில் திறந்து வைத்தல்; கிருஷ்ணருக்கு அலங்காரம்.
பக்த கோடிகள் விரும்பும் நாட்களில் அர்ச்சனை செய்தல்.
பூஜை செய்ய தனியாக ஒரு அர்ச்சகரை நியமித்து, மாத ஊதியம் வழங்கி ஆகம விதிகளின்படி அனைத்தும் நடைபெற ஏற்பாடு.
இதுவரை நடந்தவை
கோவில் இடம் அரை ஏக்கர். கல்லும், முள்ளும், கரடுகளும் நிறைந்த நிலத்தைச் சுத்தப்படுத்தி சமப்படுத்தித்தான் கிருஷ்ணன் கோவில் கட்டப்பட்டது.
இப்படிப் பல வேலைகள் இதுவரையில் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டு வருகின்றன.
எதிர்காலம்
இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டி இருப்பதாலும், இருப்பவைகளை தக்க வைக்க பராமரிப்பு (மெயின்டன்ஸ்) செய்ய வேண்டி இருப்பதாலும், இந்தக் காணும் அன்பர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை கீழ்க்காணும் கோவில் கணக்கிற்கு அனுப்புமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வங்கிக் கணக்கு முறையாகப் பேணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு அங்கீகாரம் பெற்ற ஆடிட்டர்களைக் கொண்டு கோவில் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படுகிறது.
நன்கொடை விவரம்
நிர்வாகம்
திருநகர் யாதவ பக்த சேவா சங்கம் என்பது மதுரை திருநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள யாதவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. உறுப்பினர்களாக யாதவர்கள் இருந்தாலும், கோவில் நிர்வாகம் முழுவதும் யாதவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது.
ஆனால் கோவில் யாதவர்களுக்கு மட்டும் அல்ல. யார் வேண்டுமானாலும் வரலாம்; கண்ணனை வணங்கலாம்; அர்ச்சனை, பூஜை, புனஸ்காரம் செய்யலாம்; நன்கொடைகளும் தரலாம். எந்த வித்தியாசமும் இல்லை.
இப்பகுதியில் எங்குமே கிருஷ்ணன் கோவில் இல்லாததால், கிருஷ்ண ஜெயந்தி அன்று கூட்டம் அலைமோதும்; அதற்குரிய ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்வார்கள்.




















கோவில் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள்






























நிதி அனுப்ப வேண்டிய விவரம்
கோவில் பணிகளுக்கும் பராமரிப்பிற்கும் தங்களால் இயன்ற நிதி உதவியை கோவில் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி பங்கேற்கலாம்.